நடிகர் ரஜனிகாந்தின் நடிப்பில் உருவாகி, தீபாவளிக்கு வெளியிட்டுக்காக காத்திருக்கின்றது அண்ணாத்த படம்.
தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் படங்களும் திரைக்கு வரவுள்ளதால், தீபாவளி போட்டியிலிருந்து அண்ணாத்த பின்வாங்கி விட்டதாக சமூக வலைத்தளத்தங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டன. இது ரஜினி ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்படாததன் காரணமாக, அண்ணாத்த வெளியிட்டால் போதிய வசூலினைப் பெற முடியாது போகும் என படக்குழு பின்னடிப்பதாக தகவல்கள் வெளியாகின.
அத்தோடு பொங்கலுக்கு தமிழகத்தில் 100 வீதம் திரையரங்குகள் திறக்கப்படும் நிலை காணப்படுவதால் படக்குழு பட வெளியிட்டை ஒத்திப்போட முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவை ரசிகர்களுக்கு பாரிய ஏமாற்றத்தை தந்திருந்த நிலையில், அண்ணாத்த படக்குழு விசேட அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. அதில் படம் திட்டமிட்டபடி எதிர்வரும் தீபாவளிக்கு வெளியிடப்படும் எனக் கூறியுள்ளது.
இந்த நிலையில் ரசிகர்களிடையே மீளவும் அண்ணாத்த மீதான எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
Leave a comment