சினிமா

தளபதி 69 படத்தில் இணைந்த அனிமல் பட பிரபலம்.. படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

Share

தளபதி 69 படத்தில் இணைந்த அனிமல் பட பிரபலம்.. படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய்.

இவர் நடிப்பில் சமீபத்தில் GOAT படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து விஜய் அவரது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை ‘நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு’ ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் படக்குழு சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. விஜய் – ஹெச். வினோத் இருவரும் முதல் முறையாக இப்படத்திற்காக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணி முதல் வருகிற 3-ந் தேதி வரை இப்படத்தில் நடிக்க உள்ள சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.

அதன்படி, தற்போது அனிமல் படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பிய பாபி தியோல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யாவின் கங்குவா படத்திலும் அவர் தான் வில்லனாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...