தமிழ்நாட்டில் 7 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

24 6729f86c5193c 17

தமிழ்நாட்டில் 7 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கடந்த வாரம் தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் சிவகார்த்திகேயனின் அமரன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்டத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.

மேலும் இப்படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடித்திருந்தார். சாய் பல்லவியின் நடிப்பு இப்படத்திற்கு வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ள என்று சொல்வதை விட, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு நடிப்பில் அசத்தியிருந்தார்.

உலகளவில் ரூ. 180 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள அமரன் படம் தமிழ்நாட்டில் 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழகத்தில் 7 நாட்களில் ரூ. 89.7 கோடி வரை வசூல் செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியை கடந்துவிடும் என கூறப்படுகிறது.

Exit mobile version