அதெல்லாம் வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி

Keerthy

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னைப் பற்றி வெளிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இது விஜய்க்கு 66வது படம். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகவுள்ளது.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ஏற்கனவே விஜய்யுடன் ’பைரவா’ ’சர்கார்’ ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

புதிய படத்தில் விஜய்யுடன் மீண்டும் நடிக்கிறீர்களா? என கேட்ட நிலையில், விஜய்யின் 66வது படத்தில் நான் நடிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் ஜோடியாக நான் நடிப்பதாக வெளியான தகவல் வதந்திதான் என்றார்.

#CinemaNews,

Exit mobile version