24 66a7951349da8
சினிமாசெய்திகள்

தனுஷுக்கு செக்.. அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தம்! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு

Share

தனுஷுக்கு செக்.. அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தம்! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த சில வாரங்களாக பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகின்றனர். நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசித்துவிட்டு படம் தொடங்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

அதே போல நடிகர் தனுஷுக்கு எதிராக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு நடித்து கொடுக்காததால் இனி தனுஷை வைத்து படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசித்துவிட்டு தொடங்கவும் என தெரிவித்து இருக்கின்றனர்.

“மேலும் ஒரு படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.”

“அதுமட்டுமின்றி பல படங்கள் ரிலீசுக்கு தியேட்டர் கிடைக்காமல் முடங்கி இருக்கின்றன. இந்த நிலையை மாற்ற புது விதிகள் வகுக்கப்பட இருக்கிறது. அந்த விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு புது ஷூட்டிங் தொடங்கலாம் என்பதால் 16.8.2024 பிறகு புது படங்கள் எதுவும் தொடங்க கூடாது.”

“நடிகர்கள் சம்பளம், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. அதை முறைப்படுத்த வேண்டி இருக்கிறது. தமிழ் சினிமா துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டி இருப்பதால் 01.11.2024 தேதி முதல் அனைத்து விதமான ஷூட்டிங்கும் நிறுத்தப்படுகிறது” என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இருக்கிறது.

 

Share
தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...