24 66372a4589052
சினிமாசெய்திகள்

விஜய் படத்தை ரகசியமாக பார்த்த அஜித்.. விழுந்து விழுந்து சிரித்தார்.. பிரபல இயக்குனர் கூறிய தகவல்

Share

விஜய் படத்தை ரகசியமாக பார்த்த அஜித்.. விழுந்து விழுந்து சிரித்தார்.. பிரபல இயக்குனர் கூறிய தகவல்

நடிகர் அஜித் தற்போது திரையுலகின் உச்சத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற்று வர, அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்தை கமிட் செய்துள்ளார்.

இப்படத்திற்காக ரூ. 160 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் என கூறப்படுகிறது. அதே போல் இதற்கு அடுத்ததாக இவர் நடிக்கப்போகும் படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் கேட்கவுள்ளார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

நடிகர் அஜித்தின் திரைப்படங்களும், விஜய்யின் திரைப்படங்களும் இதுவரை பல முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதே போல் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியிலும் மோதல் இருக்கிறது. அப்படி இருந்தாலும் கூட அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஒரு முறை விஜய்யின் வில்லு படத்தை பார்க்க ரகசியமாக சென்றுள்ளார் அஜித். அங்கிருக்கும் ரசிகர்களுக்கு தெரிந்துவிட கூட என எண்ணி இப்படி செய்துள்ளார். அஜித்துடன் இயக்குனர் சரண் சென்றுள்ளார். அப்படத்தை அவர் ரசித்து பார்த்தாராம்.

அதே போல் சரணும் அஜித்தும் இணைந்து சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ் படம் பார்த்துள்ளனர். அப்படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாராம் அஜித். இந்த தகவலை இயக்குனர் சரண் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...