9 2 scaled
சினிமாசெய்திகள்

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஃபஸ்ட் லுக் எப்போது?- வெளிவந்த தகவல்

Share

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஃபஸ்ட் லுக் எப்போது?- வெளிவந்த தகவல்

தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்து ஆவலாக பார்க்க விரும்பும் திரைப்படம் அஜித்தின் விடாமுயற்சி தான்.

துணிவு படத்தை தொடர்ந்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் தனது 62வது படத்தில் நடிக்க இருந்தார், ஆனால் அவர்களது கூட்டணி அமையவில்லை.

அதன்பிறகு லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்க தொடங்கினார்.

அஜர்பைஜானில் படத்தின் படப்பிடிப்புகள் நடந்துவந்த நிலையில் அங்கு முடிந்துள்ளது. அடுத்தகட்டமாக சென்னை அல்லது மும்பையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது.

அண்மையில் படம் குறித்து வந்த தகவல் என்னவென்றால், வரும் பிப்ரவரி 2ம் வாரத்தில் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்படுகிறது, அதற்கான படப்பிடிப்பும் முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனிருத் 5 பாடல்களை இசையமைத்து முடித்துள்ளதாகவும், அதில் ஆலுமா டோலுமா போல ஒரு குத்து பாடல் இருக்கிறது என்கின்றனர்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரியில் ஹைதராபாத்தில் முடிவடைந்து ஏப்ரலில் படம் ரிலீஸ் ஆகும் என செய்திகள் வருகின்றன.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....