ajith
சினிமாபொழுதுபோக்கு

அஜித்தின் புதிய ஆர்வம்: ரேஸுக்குப் பிறகு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி! 65வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா?

Share

திரைப்படம் தவிர தனக்குப் பிடித்த விஷயங்களிலும் தொடர் ஆர்வம் காட்டி வருபவர் நடிகர் அஜித்குமார். அவர் தற்போது தனது திரைத்துறை மற்றும் தனிப்பட்ட ஆர்வம் குறித்த புதிய தகவல்களால் கவனம் ஈர்த்துள்ளார்.

கார் ரேஸிங்கில் தீவிர ஆர்வம் கொண்ட அஜித், இடையில் விலகி இருந்தவர், இப்போது மீண்டும் வேறு எந்த வேலையிலும் கமிட் ஆகாமல், அதில் மட்டுமே கவனம் செலுத்தி வெற்றியும் கண்டார்.

கார் ரேஸிங்கைத் தொடர்ந்து இப்போது அஜித் துப்பாக்கி சுடுதல் (Shooting) பயிற்சியிலும் இறங்கியுள்ளார். இதற்கிடையில், சமீபத்தில் அஜித் கொடுத்த ஒரு பேட்டியும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நடிகர் அஜித் தனது 64வது படமான ‘குட் பேட் அக்லி’ யில் ஹிட் கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே நடிக்க உள்ளார். பான்-இந்தியா படமாக, பல மொழி ரசிகர்களைக் கவரும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இந்தப் படத்தில், சமீபத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜித்தின் 65வது பட இயக்குநர் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அஜித் தனது 65வது படத்திற்குப் பிரம்மாண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜைத் தேர்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...