வசூல் வேட்டையர்கள் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுனுக்கு நோ சொல்லும் பிரபல நடிகை.. எதற்கு தெரியுமா

ssss

வசூல் வேட்டையர்கள் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுனுக்கு நோ சொல்லும் பிரபல நடிகை.. எதற்கு தெரியுமா

தெலுங்கு சினிமாவில் புகழின் உச்சத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்ற நடிகர்கள் தான் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன்.

பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா ஆகிய இரண்டு படங்களுமே வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் மாஸ் வேட்டை நடத்தியது.

இவர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று பல நடிகைகள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் படத்தில் நடிக்க ஒரு முன்னணி நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்து வருவது உங்களுக்கு தெரியுமா?.

ஆம், பல இயக்குனர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பாளர்கள் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்க இந்த நடிகையை தொடர்பு கொண்டும் இவர் பிஸியாக பாலிவுட் படங்களில் நடித்து வருவதால் இந்த வாய்ப்பை மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

அவர் வேறு யாருமில்லை பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தான். இவர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version