14 12
சினிமா

பெண்கள் தானே, தலையில் எழுதியுள்ளது.. நடிகை மீனா குறித்து ரம்பா எமோஷ்னல்

Share

அழகிய லைலா, அது இவளது ஸ்டைலா என்ற பாடலை கேட்டாலே ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துவிடுவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இடம்பெற்ற இந்த பாடலில் ரம்பா ஆடிய நடனம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது.

90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, போஜ்புரி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது, ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 – ல் நடுவராக வலம் வருகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை மீனா குறித்து ரம்பா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” மீனா மிகவும் தைரியமான பெண். அவரது தைரியத்திற்கு நான் தலை வணங்குகிறேன். மீனாவின் அம்மாவும் மிகவும் தைரியமானவர்.

ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் பெண்கள் தானே என்று மிகவும் சாதாரணமாக நினைப்பார்கள். மீனாவின் கணவர் இறந்தபோது நான் அவருடன் இருக்க வேண்டும் என்று எனது தலையில் எழுதியுள்ளது. அவருக்கு எப்போதும் நாங்கள் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...