என் பேரு மீனா குமாரி பாடல் புகழ் முமைத் கானை நியாபகம் இருக்கா?- எப்படி உள்ளார் பாருங்க
கடந்த 2004ம் ஆண்டு பாலிவுட் படத்தில் ஐட்டம் டான்சராக அறிமுகமானவர் நடிகை முமைத் கான். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
நடிகர் பிரசாந்த் நடித்த மஜ்னு படத்தில் ஐட்டம் டான்சராக தமிழில் அறிமுகமானார்.
அதன்பிறகு கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாடல் படு மாஸ் நடனம் ஆட ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டார்.
டோலிவுட்டில் வெளியான போக்கிரி படத்தில் மகேஷ் பாபுவுடன் ஆட்டம் போட்ட முமைத் கான் தமிழில் தளபதி விஜய்யுடன் “என் செல்லப் பேரு ஆப்பிள்” பாடலுக்கும் குத்தாட்டம் போட்டார்.
சியான் விக்ரம், ஸ்ரேயா நடித்த கந்தசாமி படத்தில் இடம்பெற்ற “என் பேரு மீனாகுமாரி” ஐட்டம் பாடலும் இவருக்கு ஏகப்பட்ட ஹைப்பை உருவாக்கியது.
கடந்த 2016ல் தனது வீட்டில் தடுக்கி விழுந்ததில் முமைத் கானுக்கு தலைக்கு அடிபட்டு மூளைக்கு பிரச்சனை வர 15 நாட்கள் சுயநினைவு இல்லாமல் கோமாவில் இருந்துள்ளார்.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்க நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
38 வயதாகும் முமைத் கான் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார். தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.