ஒரு நாளைக்கு சூர்யாவை கடன் கேட்ட ரசிகை- ஜோதிகா கொடுத்த பதில், செம வைரல்

tamilni 432

ஒரு நாளைக்கு சூர்யாவை கடன் கேட்ட ரசிகை- ஜோதிகா கொடுத்த பதில், செம வைரல்

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.

அப்படத்திற்கு பிறகு விஜய், அஜித், விக்ரம், பிரசாந்த், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார். தமிழை தாண்டி மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

அண்மையில் மலையாளத்தில் ஜோதிகா நடித்த காதல் தி கோர் என்ற படம் வெளியாகி இருந்தது. ஹிந்தியில் மாதவன், அஜய் தேவ்கன் உடன் ஜோதிகா நடித்த சைத்தான் படமும் வெளியாகி இருந்தது.

படம் விமர்சன ரீதியாக நல்ல கமெண்ட்ஸ் பெற பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது.

சமூக வலைதளங்களில் இப்போதெல்லாம் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார் நடிகை ஜோதிகா.

அண்மையில் ஒரு ரசிகை ஜோதிகாவை டாக் செய்து, சில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஷுவிற்காக சூர்யாவை ஒருநாள் விட்டுக்கொடுத்தது போல் எனக்கு தருவீர்களா. நான் கடந்த 16 வருடங்களாக அவரது தீவிர ரசிகையாக இருந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.

அதற்கு ஜோதிகா, நோ அதெல்லாம் கிடையாது என பதில் கொடுத்துள்ளார்.

Exit mobile version