‘அதர்ஸ்’படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நடிகை கௌரி கிஷனிடம் சில யூடியூபர்கள் வரம்பு மீறிய கேள்விகளை எழுப்பிய நிலையில், அவர் கடும் கோபமடைந்தார்.
‘அதர்ஸ்’ படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், சில யூடியூபர்கள் நடிகர்களிடம், “படத்தில் இந்த நடிகையைத் தூக்கி நடித்துள்ளீர்கள். அவருடைய எடை என்ன? எவ்வளவு?” என்ற அநாகரீகமான கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இது குறித்துத் தனியார் இணையத்தளத்தில் நேர்காணலின் போது தொகுப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கௌரி கிஷன், “முட்டாள்தனமான கேள்வி (Stupid question)” என்று பதிலளித்தார்.
தங்களை எப்படி இவ்வாறு சொல்லலாம் என்று நடிகை கௌரி கிஷனுடன் யூடியூபர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அவர், “என்னுடைய எடையைத் தெரிந்து கொள்வதுதான் அவசியமா?” எனத் தைரியமாகக் கேள்வி எழுப்பினார். வாக்குவாதத்தின் இறுதியில் அவர் லேசாகக் கண் கலங்கினார்.
யூடியூபர்கள் இருவரும், “எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கேட்டபோது, நடிகை கௌரி கிஷன் “நீங்கள்தான் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று தைரியமாகக் கூறியதாக இந்தியச் செய்திகள் வெளியாகியுள்ளன.