ஹீரோவாக கலக்கி வரும் சந்தானத்தின் சம்பளம் இத்தனை கோடியா? வெளியான தகவல்!!

சந்தானத்தின் சம்பளம்

சந்தானத்தின் சம்பளம்

ஹீரோவாக கலக்கி வரும் சந்தானத்தின் சம்பளம் இத்தனை கோடியா? வெளியான தகவல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் காமெடி நடிகர் சந்தானம். இதையடுத்து சில நகைச்சுவை ரோலில் நடித்து வந்த இவர், முன்னணி காமெடி நடிகராக இருந்த வடிவேலு, விவேக்கிற்கு அடுத்த இடத்தினை பிடித்தார்.

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சந்தானம் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் படம் வருகிற ஜூலை 27ம் தேதி வெளியாகி இருக்கிறது.

இப்படம் ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் மூன்றாம் பாகம் ஆகும்.

இந்நிலையில் டிடி ரிட்டன்ஸ் படத்திற்காக சந்தானம் ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Exit mobile version