சினிமாசெய்திகள்

விடா முயற்சி சூட்டிங் ஸ்பாட்டில் திடீரென உயிரிழந்த இயக்குநர் – அதிர்ச்சியில் திரையுலகம்

4 7 scaled
Share

விடா முயற்சி சூட்டிங் ஸ்பாட்டில் திடீரென உயிரிழந்த இயக்குநர் – அதிர்ச்சியில் திரையுலகம்

இயக்குநரும், நடிகருமான மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘விடாமுயற்சி’. இதில் அஜித் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார்.இவருடன் த்ரிஷா, ஆரவ், பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ரெஜினா கசான்ட்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.‌

இந்தத் திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது இந்த மாதத்தில் தொடங்கி அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

இதற்காக படத்தின் இயக்குநர் மகில் திருமேனி, நடிகர் அஜித் மற்றும் கலை இயக்குநர் மிளன் என மிக முக்கியமானவர்கள் மட்டும் சென்றனர்.இன்றைய படப்பிடிப்பு இன்று காலை தொடங்கிய போது சூட்டிங் ஸ்பாட் பணியில் ஈடுபட்டபோது திடீரென கலை இயக்குநர் மிளன் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மிலன் உயிரிழந்துள்ளார்.

அஜித்தின் ஃபேவரிட் கலை இயக்குநர் என கருதப்படுபவர் மிளன். இந்த தகவலானது தற்போது தமிழ் சினிமாவை மிகவும் துயரத்தை ஆழ்த்தி இருக்கின்றது.அத்தோடு படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....