லியோ பட வில்லன் சஞ்சய் தத் வீட்டிற்கு வெளியே குவிந்த கூட்டம்..
நடிகர் சஞ்சய் தத் கேஜிஎப் 2 பிரம்மாண்ட ஹிட் ஆன பிறகு தற்போது தென்னிந்திய சினிமாவில் பிஸியாகிவிட்டார். அவர் தற்போது விஜய்க்கு வில்லனாக லியோ படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் தெலுங்கு டபுள் ஸ்மார்ட் என்ற படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் அவர்.
இந்நிலையில் இன்று சஞ்சய் தத்தின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து கூற லியோ படத்தின் டீஸர் வீடியோவும் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் இன்று சஞ்சய் தத் வீட்டின் முன்பு அதிக அளவு கூட்டம் கூடி இருக்கிறது. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்தவர்களுக்கு சஞ்சய் தத் வீட்டை விட்டு வெளியில் வந்து கைகொடுத்த நன்றி கூறிவிட்டு சென்று இருக்கிறார்
Leave a comment