குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அஸ்வின். இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மிகப் பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்வசம் கொண்டுள்ள இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றன.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘குட்டிஸ் பட்டாஸ்’ பாடல் மிகப்பெரும் வெற்றிபெற்றது. தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் அஸ்வின், ‘மீட் க்யூட்’ என்ற புதிய வெப் சீரிஸ் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
6 கதாநாயகிகள் நடிக்கும் ‘மீட் க்யூட்’ எனும் பிரபல நடிகர் நானி தயாரிக்கவுள்ளார். அவரது தங்கை
இயக்குகிறார். சுனைனா, அதா சர்மா, அகன்ஷா சிங், ருஹானி சர்மா, சஞ்சிதா பூனாச்சா மற்றும் வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட நடிகைகள் இதில் நடிகின்றனர்.
இந்த தொடர் 5 கதைகளை உள்ளடக்கியது. சத்யராஜ் மற்றும் ரோகினி உள்ளிட்ட பிரபல தமிழ் நடிகர்களும் இதில் நடிக்கிறார்கள். ஓடிடி-யில் ரிலீஸ்-ஆகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
Leave a comment