5 நாட்களில் 75 கோடி வசூலை அள்ளிய ஆடு ஜீவிதம்… தமிழ் நாட்டிலும் பிக்கப் ஆகிவிட்டதா?
Adu Jeevidam, which collected 75 crores in 5 days… has it picked up in Tamil Nadu too?
நடிகர் பிருத்விராஜ் மற்றும் அமலாபால் நடித்துள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் 5ம் நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இந்தியாவில் ரூ.7.45 கோடி ரூபாவும், கேரளாவில் ரூ.6.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.40 லட்சமும், தமிழ்நாட்டில் ரூ.50 லட்சமும், தெலங்கானாவில் ரூ.40 லட்சமும், இந்தியில் 10 லட்சமும், உலகளவில் ரூ.9 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, கடந்த 28ஆம் தேதி வெளிவந்த இப்படம் இரண்டு நாட்களில் மட்டும் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில், ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் 5ம் நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது.
அதன்படி, தற்போது 5 நாட்களில் 75 கோடி வசூலை ஆடு ஜீவிதம் அதிரடியாக அள்ளியிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மரியான் போலவே இந்த படம் இருப்பதால் படம் ஓடாது என எதிர்பார்த்த நிலையில், படத்தின் தரம் மற்றும் பிருத்விராஜின் கடின உழைப்புக் காரணமாக இங்கேயும் பிக்கப் ஆகி ஓடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.