சினிமா
மாட்டிகிட்ட பிறகு குடும்பத்தினர் மீது பழி போட்ட ரோஹினி, கோபத்தில் விஜயா செய்த செயல்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
மாட்டிகிட்ட பிறகு குடும்பத்தினர் மீது பழி போட்ட ரோஹினி, கோபத்தில் விஜயா செய்த செயல்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
இன்றைய எபிசோடில், முத்து பணம் திரும்பி வந்த உண்மையை குடும்பத்திற்கு தெரியப்படுத்த நீதிமன்ற விசாரணை நடத்துகிறார்.
உண்மையைவெளிக்கொண்டு வர மனோஜை குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து ஒவ்வொரு உண்மையையும் எல்லோருக்கும் கூறுகிறார்.
அதோடு ஜீவா வீட்டிற்கு வந்து எல்லோர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பணத்தை திருப்பி கொடுத்த உண்மையை கூறுகிறார்.
அவர் கூறியதை கேட்டு குடும்பமே ஆடிப்போகிறார்கள்.
இன்றைய பரபரப்பான எபிசோடிற்கு பிறகு விஜயா ரோஹினியை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
ரோஹினி நான் அப்படி செய்யவில்லை என்றால் மனோஜ் இப்போதும் பார்க்கில் தூங்கிக்கொண்டு தான் இருப்பார் என கூறுகிறார்.
அதற்கு விஜயா எங்களிடம் கூறியிருந்தால் நாங்கள் செய்திருக்க மாட்டோமா என கூற இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என ரோஹினி திருப்பி கேட்க விஜயா மீண்டும் மீண்டும் பளார் என அறைகிறார்.