சினிமா
ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் சுர்ஜித்… என்ன காரணம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2023ம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு தொடர் என்றால் அது சந்தியா ராகம் தொடர் தான்.
ரொமான்டிக் மற்றும் குடும்ப கதையை மையமாக வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வந்தார்கள். சந்தியா ஜகர்லாமுடி, அந்தாரா சுவர்ணாக்கர், புவனா லஸியா, சுர்ஜித் என பலர் நடிக்க பிரதாப் மணி இயக்கி வந்தார்.
300 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடர் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த சந்தியா ராகம் தொடரில் இருந்து நடிகர் சுர்ஜித் விலகியுள்ளாராம். தான் தொடரில் இருந்து விலகுவதாக கூறியவர் எதற்காக விலகுகிறார் என்ற காரணத்தை பதிவு செய்யவில்லை.