8 18
சினிமாசெய்திகள்

கீர்த்தி சுரேஷ் திருமணம்.. சமந்தா வெளியிட்ட உணர்ச்சிபூர்வ பதிவு

Share

கீர்த்தி சுரேஷ் திருமணம்.. சமந்தா வெளியிட்ட உணர்ச்சிபூர்வ பதிவு

நடிகை கீர்த்தி சுரேஷ் 15 வருடமாக ஆண்டனி என்பவரை காதலித்து வந்த நிலையில் நேற்று அவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

கோவாவில் ஹிந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் தளபதி விஜய், திரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்நிலையில், நடிகை சமந்தா அவரது இன்ஸ்டா பக்கத்தில் இந்த புதுமண ஜோடியை வாழ்த்தி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷின் ஒரு திருமண புகைப்படத்தை பதிவிட்டு அதன் கீழ் “இந்த புகைப்படம் என் இதயம் முழுவதும் நிறைந்துள்ளது. திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

உங்கள் இருவருக்கும் என் அன்பும் வாழ்த்தும் ” என்று பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஏன் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் சமந்தா கலந்து கொள்ள வில்லை என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...