8 11
சினிமா

இதுவரை எனக்கு அந்த பீலிங்கே இல்லை, தனிமை தான்… ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்

Share

இதுவரை எனக்கு அந்த பீலிங்கே இல்லை, தனிமை தான்… ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்ற அடையாளத்துடன் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

தனுஷ்-ஸ்ருதிஹாசனை வைத்து 3 என்ற படம் இயக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் அடுத்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படம் இயக்கினார், ஆனால் சரியாக ஓடவில்லை.

பின் சினிமா வீரன் என்ற ஆவணப்படம் எடுத்தார், கடைசியாக விக்ராந்த், விஷ்ணு விஷால், ரஜினிகாந்த் வைத்து லால் சலாம் என்ற படம் இயக்கினார். இயக்குனர் என்பதை தாண்டி டப்பிங் கலைஞராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.

தற்போது நடிகர் தனுஷை விவாகரத்து செய்து தனியாக இருக்கும் ஐஸ்வர்யா இதற்கு முன் வாழ்க்கை குறித்து கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர், வாழ்க்கையின் தத்துவத்தை கடந்த 2, 3 ஆண்டுகளின் நான் கற்றுக் கொண்டேன்.

தனிமை எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கிறது, அந்த தனிமையை நான் விரும்புகிறேன். நான் புரிந்துகொண்ட மற்றொரு விஷயம் என்னவென்றால் தனிமையில் இருக்கும் ஓருவர்தான் வாழ்க்கையில் மிகவும் பாதுகாப்பான நபராக இருக்கிறார்.

Bore அடித்தால் என்ன செய்வீர்கள் என கேட்கிறார்கள், முதலில் எனக்கு அப்படி தோன்றியது கிடையாது, இதனால் எனக்கு அந்த பீலிங்கே வந்தது இல்லை என பேட்டி கொடுத்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

dailythanthi 2026 02 14 7466cod3 6
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் D55: 35 கோடி சம்பளத்தை மறுத்த மம்மூட்டி! – ‘கதைக்காக’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ், தற்போது தனது 55-வது திரைப்படத்தை இயக்கி...

1612945 varalaxmi
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநராக அவதாரம் எடுத்த வரலட்சுமி சரத்குமார்! – சரஸ்வதி படத்திற்காகப் புரட்சிகரமான புரோமோ வீடியோ வெளியீடு!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் தனது சிறப்பான நடிப்பால் முத்திரை...

26 698c2e116f1d6
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2-வில் இணைந்தார் எஸ்.ஜே. சூர்யா! – சிவராஜ்குமார் உறுதி செய்த அதிரடித் தகவல்!

2023 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாகத் தயாராகி...