4 49
சினிமாசெய்திகள்

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

Share

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

கோமாளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக முத்திரை பதித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 2022ல் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்த படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து, கதாநாயகனாக நடிக்க தொடங்கி விட்டார்.

தற்போது, இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் Love Insurance Kompany மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தி ஈஸ்வரன் இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

தற்போது, இந்த தகவல் குறித்து கூடுதல் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, பிரதீப் நடிக்கப்போகும் அடுத்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தயாரிப்பு நிறுவனம் தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகிறது. தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் குட் பேட் அக்லீ படத்தையும் மைத்ரி மூவி நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...