24 6729f86c5193c 4
சினிமா

கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யாவின் 44 – வது படம் ரெடி!.. ரிலீஸ் எப்போது தெரியுமா

Share

கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யாவின் 44 – வது படம் ரெடி!.. ரிலீஸ் எப்போது தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் வரும் நவம்பர் 14 – ம் தேதி வெளிவர உள்ள படம் கங்குவா.

சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், நட்டி நட்ராஜ் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் பிஸியாக உள்ளனர்.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அவரது 44 – வது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் 28 – ம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...