3 3
சினிமாசெய்திகள்

நைஜீரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம்: 29 சிறுவர்களுக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு

Share

நைஜீரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம்: 29 சிறுவர்களுக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு

நைஜீரியாவில் (Nigeria) அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறதால் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது.

மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத சூழலில் உள்ள நிலையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி, நைஜீரிய இளைஞர்கள் அந்நாட்டுக்கு எதிராக தீவிர போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால்,போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது நைஜீரிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் மீது தேசத் துரோகம், கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் அனைவரும் 14 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, நைஜீரியாவில் 1970-களில் மரண தண்டனை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், 2016 முதல் மரணதண்டனை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் குழந்தைகள் உரிமைப்படி, 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மரண தண்டனை வழங்க முடியாது என்று வழக்கறிஞர் அகிந்தயோ பலோகுன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...