சினிமா
மாரி செல்வராஜ் இயக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வாழை படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ்… இதுவரையிலான கலெக்ஷன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வாழை படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ்… இதுவரையிலான கலெக்ஷன்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என வெற்றிப்படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான திரைப்படம் வாழை.
இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொன்வேல், ராகுல் நடிக்க, கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல், ஜெய் சதீஷ் குமார், ஜானகி என பலர் நடித்துள்ளனர்.
அந்த படம் மாரி செல்வராஜ் தனது சிறுவயதில் சந்தித்த வலி, அனுபவித்த ரணத்தை படத்தில் அழகாக காட்டி உள்ளார்.
முதல் நாளில் ரூ. 1.15 கோடியை வசூலித்த நிலையில் 2ம் நாளில் ரூ. 2.5 கோடியாக அதிகரித்தது. மொத்தமாக மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் இதுவரை ரூ. 27 கோடி வரை வசூல் செய்துள்ளது.
நல்ல வசூல் வேட்டை படம் நடத்திவர வரும் செப்டம்பர் 5ம் தேதி விஜய்யின் கோட் படம் வெளியாகவுள்ள நிலையில் வசூலிக்கு கொஞ்சம் பாதிப்பு இருக்கலாம் என்கின்றனர்.