9 2 scaled
சினிமா

50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாலம் ரஜினி.. கங்குவா – வேட்டையன் குறித்து பேசிய சூர்யா..

Share

50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாலம் ரஜினி.. கங்குவா – வேட்டையன் குறித்து பேசிய சூர்யா..

சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளிவரவிருந்தது. அதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் வெளியானது.

இதனால் அப்படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால், அதே தேதியின் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளிவருவதாக அறிவித்தவுடன் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் வந்துள்ளது என தகவல் வெளியானது.

இது சூர்யாவின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தது. நேற்று கார்த்தியின் மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா கங்குவா ரிலீஸ் குறித்து ரஜினிகாந்த் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சூர்யா பேசியது : “ரஜினி சாரோட வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகுது. நான் பிறக்கும் போதே சினிமாவிற்கு வந்த மூத்தவர் அவர். 50 வருடங்களாக சினிமாவின் அடையாளமாக இருக்கிறார். அதனால் ரஜினி சார் படம் ரிலீஸ் ஆகுறது தான் சரியா இருக்கும். கங்குவா ஒரு குழந்தை, அந்த குழந்தை வர்ற அன்னைக்கு தான் பிறந்தநாள். அன்று பண்டிகையாக படத்தை கொண்டாடுவார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கு” என பேசினார்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...