24 66c98b0fa89f1 3
சினிமா

GOAT ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தளபதி விஜய்.. இதுவரை இத்தனை கோடி வசூலா

Share

GOAT ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தளபதி விஜய்.. இதுவரை இத்தனை கோடி வசூலா

தளபதி விஜய் – இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பிரமாண்டமாக தயாராகி இருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளிவரவுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி, மோகன், ஜெயராம் என பலரும் நடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது உலகம் முழுவதும் துவங்கியுள்ளது. இந்த நிலையில் இதுவரை GOAT திரைப்படம் உலகளவில் செய்துள்ள ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, GOAT திரைப்படம் உலகளவில் ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. ரிலீஸுக்கு முன் கண்டிப்பாக ப்ரீ புக்கிங்கிலேயே இப்படம் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Share
தொடர்புடையது
25 692437caced28
சினிமாபொழுதுபோக்கு

AK 64 ஷூட்டிங் பிப்ரவரியில் ஆரம்பம்: குட் பேட் அக்லி வெற்றிக்குப் பின் ஆதிக் ரவிச்சந்திரனின் அதிரடி அறிவிப்பு!

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இந்த ஆண்டு வெளிவந்த ‘குட்...

MediaFile 19
சினிமாபொழுதுபோக்கு

அர்ஜுன் தாஸின் புதிய படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’ எனத் தலைப்பு: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும், சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் உருவாக்கங்கள் குறைவாகவே இருக்கின்றன. இந்தச்...

25 6923f77d7e1c3
சினிமாபொழுதுபோக்கு

இசைக் கச்சேரிகளில் ஹிப்ஹாப் ஆதி சாதனை: 1.5 ஆண்டுகளில் ரூ. 160 கோடி வரை சம்பாதித்ததாக தகவல்!

தமிழ் சினிமாவில் ஒரு துறையில் களமிறங்குபவர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் எல்லா விஷயங்களிலும் ஆர்வம்...

Mahat Raghavendra 1
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் மகத் ராகவேந்திரா அதிரடி மாற்றம்: குத்துச்சண்டைப் பயிற்சியில் புதிய தொடக்கம்!

தமிழ் சினிமாவில் மங்காத்தா, ஜில்லா, சென்னை 28, மாநாடு உள்ளிட்ட படங்களில் மக்களின் கவனத்தைப் பெற்ற...