24 669a6062e0fda
சினிமா

ஜிம் போகாமல் தனது உடல் எடையை குறைத்தது எப்படி?- நடிகர் மாதவன் சொன்ன சீக்ரெட்

Share

ஜிம் போகாமல் தனது உடல் எடையை குறைத்தது எப்படி?- நடிகர் மாதவன் சொன்ன சீக்ரெட்

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் மாதவன்.

முதல் படத்தின் மூலமாகவே பெண் ரசிகைகளை பேராதரவை பெற்றார். அதன்பின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் 2001ம் ஆண்டு மின்னலே படத்தில் நடிக்க ஹிட் படமாக அமைந்தது.

அதன்பின் ரன், பிரியமான தோழி, கன்னத்தில் முத்தமிட்டால், ஜே ஜே, ஆயுத எழுத்து என தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தவர் இடையில் காணவில்லை.

பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு இறுதிச்சுற்று மூலம் மாஸ் காட்டியவர் விக்ரம் வேதா, மாறா என கலக்க தொடங்கினார்.

சமீபத்தில் உடல் எடை கூடி காணப்பட்ட மாதவன் 21 நாளில் ஜிம் போகாமல் உடல் எடையை குறைத்துள்ளார். ஜிம் செல்வது, உடற்பயிற்சி செய்வது என எந்த மாதிரியான உடற்பயிற்சியும் நான் செய்யவில்லை.

அதற்கு பதிலாக, உணவை நன்றாக மென்று ரசித்து சாப்பிடுவேன், 40 முதல் 60 முறை தண்ணீர் குடிப்பேன்.

மாலை 6.45 மணிக்குள் சமைத்த உணவை சாப்பிடுவேன், அதிகாலை 90 நிமிடமும், தூங்குவதற்கு முன்னும் நடைபயிற்சி செய்வேன், இயற்கையான உணவு, பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துக்கொண்டு 21 நாட்களில் உடல் எடையை குறைத்ததாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...