24 66629aae84154
சினிமாசெய்திகள்

இந்தியன் 2 படத்தின் கதைக்களம் இதுதான்.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

Share

இந்தியன் 2 படத்தின் கதைக்களம் இதுதான்.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

கமல் ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த பிரமாண்ட திரைப்படம் இந்தியன். லஞ்சத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.

இதன்பின் 28 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தனது கணவர் சினேகனின் பிறந்தநாளுக்கு சூப்பர் பரிசு கொடுத்த கன்னிகா ரவி… இதோ கியூட் வீடியோ
தனது கணவர் சினேகனின் பிறந்தநாளுக்கு சூப்பர் பரிசு கொடுத்த கன்னிகா ரவி… இதோ கியூட் வீடியோ
நாளை இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்துள்ள பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் கதைக்களம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல் மற்றும் அநியாயங்களை கேள்விப்பட்டு ஹாங் ஹாங்கில் இருக்கும் ‘சேனாபதி’ கமல் ஹாசன் இந்தியாவிற்கு மீண்டும் வருகிறார். அவருடைய வருகையில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் இங்கு நடந்தது என்பதே படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது.

இந்தியன் முதல் பாகத்தை போலவே இந்தியன் 2ஆம் பாகத்திலும் லஞ்சம், ஊழல் மற்றும் அநியாயங்களை தட்டிக்கேட்கும் ஹீரோவாக சேனாபதி கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தாலும், இயக்குனர் ஷங்கரின் திரைக்கதை கண்டிப்பாக நம்மை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...