வாழ்க்கையில் நுழைந்த மிகவும் ஸ்பெஷல் நபர், பிரபாஸ் போட்ட பதிவு- யார் அவர், ரசிகர்கள் உற்சாகம்
தெலுங்கு சினிமாவில் 2002ம் ஆண்டு ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ்.
பின் 2004ம் ஆண்டு வெளியான வர்ஷம் படத்தின் வெற்றியின் மூலம் தெலுங்கு சினிமாவில் அங்கீகரிக்கப்பட்ட இவர் சத்ரபதி, புஜ்ஜிகாடு, பில்லா, டார்லிங், மிஸ்டர் பர்ஃபெக்ட், மிர்ச்சி என தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்தார்.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி என்ற படத்தில் நடிக்க பான் இந்தியா நடிகராக மாறினார்.
ஆனால் அதன்பிறகு பிரபாஸ் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.
தற்போது பிரபாஸ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், டார்லிங்ஸ், கடைசியாக ஒரு ஸ்பெஷல் நபர் நமது வாழ்க்கையில் நுழைய போகிறார், காத்திருங்கள் என பதிவு செய்துள்ளார்.
இதனை பார்த்த உடனே அவருக்கு பெண் கிடைத்துவிட்டதா என நினைக்க ஆனால் அவரோ நமது வாழ்க்கையில் என பதிவிட்டுள்ளதால் பட தகவல் வரப்போகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் உண்மை என்ன என்பதை அரிய ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.