சினிமாசெய்திகள்

சினிமா, அரசியல் என கெத்தாக கலக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு…. அவரே வெளியிட்ட விவரம்

24 66006dc9c511b
Share

சினிமா, அரசியல் என கெத்தாக கலக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு…. அவரே வெளியிட்ட விவரம்

முன்னணி நடிகர்களுடன் படம் நடித்தால் தான் பிரபலம் ஆக முடியும் என்ற எண்ணத்தை உடைத்து தனியாக படங்கள் நடித்தாலும் உயர முடியும் என்பதை நிரூபித்துள்ளவர் நடிகை கங்கனா ரனாவத்.

தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கடந்த 2021ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த தலைவி படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.

அப்படத்தில் ஜெயலலிதாவாக நடித்தவர் கடந்தாண்டு வெளிவந்த சந்திரமுகி படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்தார். இப்போது அவர் அரசியலிலும் ஈடுபட்டு கலக்கி வருகிறார்.

தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜன சார்பில் போட்டியிடுகிறார். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜன வேட்பாளராக கங்கனா ரனாவத் களமிறக்கப்பட்டு இருக்கிறார், அதற்காக அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர், ரூ. 90 கோடிக்கு மேல் சொத்துள்ளக் இருப்பதாகவும், ரூ. 28 கோடி அசையும் சொத்துக்களும் ரூ. 62 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் கையில் ரூ. 2 லட்சமும், வங்கிக் கணக்கில் ரூ. 1 கோடி 35 லட்சமும் உள்ளதாம். இதுதவிர 6.5 கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி 3 கோடி மதிப்புள்ள 14 கேரட் வைர நகைகள் உள்ளதாம்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...