சினிமா
சிம்புவுக்கு சொன்ன கதையில் நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்!! உண்மையை உடைத்த இயக்குனர் ..
சிம்புவுக்கு சொன்ன கதையில் நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்!! உண்மையை உடைத்த இயக்குனர் ..
அஸ்வத் மாரிமுத்து, கடந்த 2010 ஆண்டு வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.
அசோக் செல்வம் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
2022ம் ஆண்டில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, பிரபல நடிகர் சிம்புவுக்கு கதையைச் சொல்லியதாகவும், அதற்குச் சிம்பு ஓகே சொல்லிவிட்டார் என்றும் கூறியிருந்தார். ஆனால் அதன் பின்னர் படம் குறித்து எந்த ஒரு தகவலும் வரவில்லை.
தற்போது பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் LIC என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விரைவில் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இது பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
சிம்புக்கு சொன்ன கதையில் தான் பிரதீப் நடிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இது தொடர்பாக பேசிய இயக்குனர், நான் சிம்புக்குச் சொன்ன கதை வேறு. இது பிரதீப்புக்காக எழுதிய கதை என்று கூறியுள்ளார்.