9 2 scaled
சினிமாசெய்திகள்

விஜய்யை தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாகும் 67 வயது நடிகர்.. வேற லெவல் மாஸ்

Share

விஜய்யை தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாகும் 67 வயது நடிகர்.. வேற லெவல் மாஸ்

ரஜினிகாந்த் தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கான டைட்டில் டீசர் வருகிற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான டீசரும் தற்போது தயாராகிவிட்டது. கண்டிப்பாக இது ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் இணைந்து ஷோபனா நடிக்க போகிறார், 33 ஆண்டுகளுக்கு பின் இருவரும் இணைகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், தலைவர் 171 படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் வில்லனாக நடிக்க நடிகர் மைக் மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். மேலும் விஜய் சேதுபதி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் Goat திரைப்படத்தில், வில்லனாக நடித்து வரும் நடிகர் மோகன் தற்போது விஜய்யை தொடர்ந்து ரஜினிக்கும் வில்லனாகிறாரா என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...