சினிமாசெய்திகள்

மறைந்த நடிகர் சேஷு கடைசியாக அனுப்பிய மெசேஜ்- இத்தனை லட்சம் இல்லாமல் உயிர் போனதா?

24 6604f69b2aef9
Share

மறைந்த நடிகர் சேஷு கடைசியாக அனுப்பிய மெசேஜ்- இத்தனை லட்சம் இல்லாமல் உயிர் போனதா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் இன்றும் பிரபலமாக பேசப்படுகிறது, அதில் ஒரு நிகழ்ச்சி தான் லொள்ளு சபா.

இந்த நிகழ்ச்சி மூலம் எத்தனையோ கலைஞர்கள் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து உயர்ந்துவிட்டார்கள், சிலர் இன்னும் தங்களது திறமையை நிரூபிக்கும் வகையில் படம் அமையாமல் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டனர்.

அப்படி லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றியை கண்டவர் நடிகர் சேஷு. இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் நடிகர் சேஷுவின் மறைவு குறித்து வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இயக்குனர் கார்த்தி யோகி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

அதில் அவர், வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் பரதநாட்டியம் சீம் எடுக்குப்போது அவருக்கு 45 வயது தான் என்று நினைத்தேன், ஆனால் மருத்துவமனையில் இருக்கும் போது தான் அவருக்கு 60 வயது என தெரியும்.

அவர் பேசுற டயலாக் எல்லாமே காமெடியாக இருக்கும். மற்ற காமெடி நடிகர்கள் ஒரு வரியில் பன்ச் மாதிரி சொல்வார்கள். ஆனால், சேஷு எல்லாம் பாடி லாங்குவேஜ் காமெடி பண்ணி அசத்துவார்.

பரதநாட்டியம் வீடியோ ஒரு மில்லியன் போய்விட்டது, செம வைரல் ஆகிடுச்சு சந்தோசமாக இருக்கு என்று சொன்னார். உடனே நான் அதை ரிபோர்ட் பண்ணி டெலிட் பண்ண சொல்றேன் என்றேன்.

உடனே அவர், அதெல்லாம் பண்ணிடாதீங்க, நமக்கு ரீச் ஆனா சரி தான் என அவர் கடைசியாக எனக்கு மருத்துவமனை செல்வதற்கு முன் மெசேஜ் செய்தார்.

எல்லோருக்கும் ஓடிப்போய் உதவிய சேஷு அவர்களின் உயிரை காப்பாற்ற ரூ. 10 லட்சும் இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது என பேசியுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...