24 660522e5299b7
சினிமாசெய்திகள்

ஆடு ஜீவிதம் திரைவிமர்சனம்

Share

ஆடு ஜீவிதம் திரைவிமர்சனம்

சமீபகாலமாக மலையாள திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம்.

பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலா பால் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். உண்மை கதையை மையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களை பூர்த்தி செய்துள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
கதாநாயகன் நஜீப் {பிரித்விராஜ்} தனது நண்பனின் மாமாவின் மூலம் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக செல்கிறார். உதவியாளர் வேலைக்காக தான் செல்கிறோம் என மகிழ்ச்சியில் இருந்த பிரித்விராஜிற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அடிமை வேலை கிடைக்கிறது.

இந்த வேலைக்காக நான் வரவில்லை, என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சி கதறுகிறார். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. என்ன செய்வது எது செய்வது என்று தெரியாமல், பல கொடுமைகளை அனுபவிக்கிறார். தப்பிக்க முயற்சி செய்தபோதும், தன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் முதலாளியிடம் மாட்டிக்கொள்கிறார்.

இப்படி பல வருடங்கள் செல்ல, ஆளே மாறிப்போன நிலையில் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வரும் பிரித்விராஜுக்கு என்ன நடந்தது? இறுதியில் அவர் அங்கிருந்து தப்பித்தாரா இல்லையா? என்பதே ஆடு ஜீவிதம் படத்தின் மீதி கதை.

பென்யமின் எழுத்தில் உருவான ஆடு ஜீவிதம் நாவலை மையமாக வைத்து இயக்குனர் பிளஸ்ஸி அருமையான படைப்பை கொடுத்துள்ளார். அடிமையாக நஜீப் பட்ட கஷ்டங்களை தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் திரையில் காட்டியுள்ளார் பிரித்விராஜ்.

பாலைவனத்தில் தண்ணீருக்காக ஏங்கும் காட்சிகளும், சாலை {Road} எங்கே, சாலை கண்ணில் தெரியவில்லையே என பித்து பிடித்தது போல் திரியும் காட்சிகளும் நம் மனதை உறைய வைக்கிறது.

எப்படியாவது நம் குடும்பத்தை பார்த்துவிடமாட்டோமா என நம்பிக்கையுடன் பிரித்விராஜ் முயற்சி செய்யும் காட்சிகள் அனைத்துமே மெய்சிலிர்க்க வைக்கிறது. கண்டிப்பாக அவருக்கு தேசிய விருது உறுதி. இவை அனைத்தையும் தனது பின்னணி இசையில் நம்மை உணர வைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

அதே போல் உலக தரத்தில் அமைந்துள்ளது ஒளிப்பதிவாளர் சுனிலின் ஒளிப்பதிவு. குறிப்பாக பாலைவனத்தில் தண்ணீர் கிடைக்கும் காட்சிகளும், பிரித்விராஜ் கண்களில் சாலை தென்படும் போதும், ஒட்டகம் கண்ணில் பிரித்விராஜ் முகம் தெரியும் போதும் ஒளிப்பதிவு வேற லெவலில் இருந்தது.

எடிட்டிங் பக்கா. ஆனால், படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்றால் மெதுவாக செல்லும் திரைக்கதை தான். இது மட்டும் விறுவிறுப்பாக இருந்திருந்தால் படத்தில் குறை என்பதே இருந்திருக்காது.

அமலா பாலுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், கிடைத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். பிரித்விராஜுடன் பாலைவனத்தில் போராடிய கோகுல், Jimmy Jean-Louis நடிப்பு பாராட்டுக்குரியது.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

124612405 1
பொழுதுபோக்குசினிமா

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவிற்கு இன்று 43-வது பிறந்தநாள்! அரசன் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருப்பு.

தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராகத் திகழும் நடிகர் சிலம்பரசன் (STR), இன்று தனது 43-வது...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...