திருவனந்தபுரம் செல்பிக்கு போட்டி..பிரியாணி, பில்லியர்ட்ஸ் உடன் அஜித்..!
திரை உலகை பொருத்தவரை அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்தாலும் தொழில் முறையில் இருவரும் இன்னும் போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பதும் அவர்களுடைய ரசிகர்களும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் தங்கள் விருப்பத்திற்குரிய நடிகரை வாழ்த்தியும், பிடிக்காத நடிகரை தாழ்த்தியும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் விஜய்யின் திரைப்படத்தில் அப்டேட் ஒன்று வந்தால் உடனே அஜித் தரப்பிலிருந்து ஏதாவது ஒரு புகைப்படம் வரும் என்பதும், அதேபோல் அஜித் படத்தின் அப்டேட் வந்தால் விஜய் சம்பந்தமான செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருவதும் பல ஆண்டுகளாக நடந்து வரும் சம்பவங்களாக உள்ளது.
அந்த வகையில் தற்போது திருவனந்தபுரத்தில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் சென்றிருக்கும் நிலையில் அங்கு அவர் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ரசிகர்களை சந்திக்கிறார் என்பதும், ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம். கடந்த சில நாட்களாக விஜய்யின் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில் அஜித்தும் தன் பங்குக்கு தன்னுடைய புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
குறிப்பாக அஜித் பைக்கை எடுத்துக் கொண்டு டூர் கிளம்பிய புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது திடீரென தனது பைக் டீம்களுக்கு பிரியாணி செய்து கொடுக்கும் புகைப்படம், அவர்களுடன் பில்லியர்ட்ஸ் விளையாடும் புகைப்படம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில் அஜித், விஜய் போட்டி என்பது மறைமுகமாக இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது இந்த ட்ரெண்டில் இருந்து தெரிய வருகிறது.
- Actor Ajith
- ajith
- ajith bike trip
- ajith birthday video
- ajith car video
- ajith famil function
- ajith fans
- ajith hit songs
- ajith in icu
- Ajith Kumar
- ajith kumar song
- ajith kumar song 2022
- ajith kumar songs
- ajith kumar video song
- ajith latest in public
- ajith latest video
- ajith mems
- ajith movies
- ajith new movie
- ajith news
- ajith shalini
- ajith shorts
- ajith songs
- ajith video
- ajith vote video
- ajith vs vijay
- latest ajith updates
- thala ajith