45 வயது பெண்ணா இவர்? வேற லெவல் வொர்க் அவுட் வீடியோ வெளியிட்ட ஜோதிகா..!
நடிகை ஜோதிகாவுக்கு தற்போது 45 வயதாகும் நிலையில் அவரது குழந்தைகளும் நன்றாக வளர்ந்து விட்ட நிலையில் இப்போது கூட அவர் உடலை ஃபிட்டாக வைத்திருக்க தீவிரமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார். அவ்வப்போது ஜோதிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெகு தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ’45 வயதில் எவ்வளவு கடினமான உடற்பயிற்சிகளை எல்லாம் அசால்டாக ஜோதிகா செய்கிறார் என்றும் அவர் வேற லெவல் தன்னம்பிக்கை உடையவர் என்றும் கூறி வருகின்றனர்
இந்த வீடியோவுக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகா பெண்ணினத்திற்கு ஒரு முன்னுதாரணம் என்றும் அவரை மாதிரி மற்ற பெண்களும் தீவிர உடற்பயிற்சி செய்தால் உடம்பை மட்டும் இன்றி மனதையும் பிட்டாக வைத்திருக்கலாம் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது
மேலும் இந்த பதிவில் அவர் ’உடற்பயிற்சி என்பது நீங்கள் எடையை குறைப்பதற்காக மட்டும் இன்றி, நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை பெறுவதற்கும்’ என்று கேப்ஷனாக ஜோதிகா பதிவு செய்துள்ளார்.
- Cinema News
- cinema news tamil
- cinema seithigal
- hot tamil cinema news
- jothika
- kollywood news
- latest news
- latest tamil cinema news
- live news
- tamil cinema actress news
- tamil cinema latest news
- tamil cinema news
- tamil cinema news in tamil language
- tamil cinema news kollywood kisu kisu
- tamil cinema news latest
- tamil cinema news latest today
- tamil cinema news today
- tamil cinema news video
- tamil cinema today news
- Tamil news
- tamil news today
- viral news