tamilni 97 scaled
சினிமாசெய்திகள்

சென்னைல டிராவல் பண்ண பிடிக்கல.. 10 வருசமா வலி மட்டும் தான் மிச்சம் இருக்கு! டிடி கண்ணீர் பேட்டி

Share

சென்னைல டிராவல் பண்ண பிடிக்கல.. 10 வருசமா வலி மட்டும் தான் மிச்சம் இருக்கு! டிடி கண்ணீர் பேட்டி

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான DD என்று செல்லமாக மக்கள் மத்தியில் அழைக்கப்படுபவர் தான் திவ்ய தர்ஷினி.

டிடி இளம் வயதில் இருந்து விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதுவும் சூப்பர் சிங்கர் என்றால் டிடி தான். அவ்வளவுக்கு சிறப்பாக கொண்டு நடத்துவார்.

வெள்ளித்திரையிலும் சில படங்களில் டிடி நடித்துள்ளார். அதுமட்டுமின்றி விஜய் அவார்ட்ஸ், பெரிய நடிகர்களின் ஆடியோ லான்ச் என்றால் டிடி தான் தொகுத்து வழங்குவார். மேலும் கல்லூரியில் ஆசிரியராகவும் இவர் பணிபுரிந்து இருக்கிறார்.

அவரது காலில் பிரச்சனை உள்ளதால் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். டிடியால் நிறைய நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாது. சமீபகாலமாக சில நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதும் ஸ்டிக் வைத்து தான் டிடி நடந்து வருகிறார்.

இந்த நிலையில், டிடிக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனையால் 10 ஆண்டுக்கு மேலாக வலியால் அவதிப்பட்டு வருவதாக கண்ணீருடன் பேசி உள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

எனக்கு இந்த பிரச்சனை ஆரம்பித்தது 2013ல். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இந்த பத்து வருடத்தில் வலியில்லாத நாட்களே இல்லை. நான் இந்த பத்து வருடத்தில் பத்து நாட்கள் கூட வலி இல்லாமல் தூங்கி இருக்க மாட்டேன். தினமும் வலி மட்டும் தான் மிஞ்சி இருந்தது. வலியோடு தான் வாழ்க்கையை நகர்த்தி வருகிறேன்.

இருந்தாலும் எனக்கு டிராவல் பண்ணுவது பிடிக்கும். வீல்சேரில் பல நாடுகளுக்கு செல்கின்றேன். ஆனால் சென்னையில் நான் டிராவல் செய்யாததற்கு காரணம் வீல்சேரில் இருந்து சாலையில் செல்ல முடியாது என்பதால் தான். அதை நினைக்கும் போது தான் மனசு கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதேவேளை, விஜய் டிவியில் இப்போது பிரியங்கா, ரக்சன், மாகாபா போன்ற தொகுப்பாளர்கள் தான் பணியாற்றி வருகிறார்கள். டிடி எப்போது மீண்டும் பழைய பொலிவுடன் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...