tamilni 101 scaled
சினிமாசெய்திகள்

நயன்தாரா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன்.. வருத்தப்படும் கெளதம் கார்த்திக்

Share

நயன்தாரா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன்.. வருத்தப்படும் கெளதம் கார்த்திக்

கடந்த 2015 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த படத்தில் தனக்கு அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அந்த வாய்ப்பை தான் மிஸ் செய்து விட்டதாகவும் நடிகர் கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் முதலில் நாயகனாக நடிக்க கௌதம் கார்த்திக் தான் கமிட்டாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் தான் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’வை ராஜா வை’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து இரண்டில் எதை தேர்வு செய்யலாம் என்றபோது தான் ’வை ராஜா வை’ படத்தை தேர்வு செய்ததாகவும் ’நானும் ரவுடிதான்’ படத்தை தான் மிஸ் செய்து விட்டதாகவும் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் அந்த படம் வெளியாகி தான் தியேட்டரில் பார்த்தபோது அந்த படத்துக்கு விஜய் சேதுபதி தான் பொருத்தமாக இருப்பார் என்பதை புரிந்து கொண்டு அவருக்கு தான் வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் கூறினார். அதன் பிறகு நயன்தாராவுடன் நடிக்க இன்று வரை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் இனிமேல் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அதை பயன்படுத்திக் கொள்வேன் என்றும் அவர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பின் போது தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் அரும்பியது என்பதும் அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...