tamilni Recovered 18 scaled
சினிமாசெய்திகள்

திருமாவளவனை நேரடியாக தாக்கும் படத்தில் சசிகுமார்? சர்ச்சைக்குரிய வசனங்களால் பரபரப்பு..!

Share

சசிகுமார் நடித்த படம் ஒன்றில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர்கள் கூறியதை அடுத்து அந்த படத்தை அவர்கள் பார்த்ததாகவும் சில வசனங்களை நீக்க சொன்னதாகவும் சில மாற்றங்கள் செய்ய சொன்னதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’நந்தன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் மார்ச் மாதம் திரைக்கு வர இருக்கும் நிலையில் இந்த படத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிரான சில கருத்துக்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இதனை அடுத்து திருமாவளவன் தரப்பினர் ’நந்தன்’ படக்குழுவினரை அணுகி அந்த படத்தை நாங்கள் பார்க்க வேண்டும் என்று கூறியதாகவும் இதனை அடுத்து ’நந்தன்’ படத்தை அவர்களுக்கு திரையிட்டு காட்டியதாகவும் கூறப்படுகிறது.

’நந்தன்’ படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகளின் பிரமுகர்கள், அந்த படத்தில் சில நெருடலாக இருந்த வசனங்களை மாற்ற கோரிக்கை விடுத்ததாகவும், குறிப்பாக திருமாவளவனை நேரடியாக தாக்கும் வசனங்கள் அமைந்திருந்ததால் அந்த வசனங்களை மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அதற்கு நந்தன் பட குழுவினர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ’நந்தன்’ திரைப்படம் திட்டமிட்டபடி மார்ச் மாதம் வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
shruthi1 1752546398
சினிமாபொழுதுபோக்கு

திருமணம் செய்தால் ரெஜிஸ்டர் ஆபீஸில் தான் செய்வேன்- ஸ்ருதி ஹாசன் தகவல் வைரல்!

முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். தற்போது 39 வயதாகும் ஸ்ருதி ஹாசன், இதுவரை...

25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...