வருமா வராதா? துருவ நட்சத்திரம் படத்தின் பிரச்சனையை தீர்க்க இத்தனை கோடிகளா
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வெளிவராமல் பல பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சிம்ரன், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், விநாயகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு துவங்கிய இப்படம் 2019ல் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது வெளியாகவில்லை.
இதன்பின் கொரோனா தோற்று ஏற்பட்டதால் எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டு இப்படம் வெளிவரும் என கூறப்பட்டது. ஆனால், அந்த தேத்திலும் இப்படம் வெளிவரவில்லை.
தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிபோனதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இறுதியாக 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகிறது என அறிவித்து, டிரைலர் கூட வெளிவந்தது. ஆனால், அப்போதும் இப்படத்தின் மீது இருந்த சில பிரச்சனைகள் காரணமாக படம் வெளியாகவில்லை. இதனால் இப்படம் வருமா? வராதா? என்ற மனநிலைமைக்கு ரசிகர்கள் சென்றுவிட்டனர்.
இந்நிலையில், தற்போது அந்த அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்ய ரூ. 60 கோடியை புரட்டிவிட்டாராம் இயக்குனர் கவுதம் மேனன். விரைவில் இப்படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறதாம். ஆகையால் இந்த ஆண்டு துருவ நட்சத்திரம் வெளிவருவது உறுதி என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.
Comments are closed.