சினிமா
50 ரூபாய் சம்பளத்திற்கு 15km நடந்த நடிகை., இன்று இந்தியாவின் நம்பர் 1 பிரபலம்: அவர் யார்?
50 ரூபாய் சம்பளத்திற்கு 15km நடந்த நடிகை., இன்று இந்தியாவின் நம்பர் 1 பிரபலம்: அவர் யார்?
என்றுமே சுலபமான வழியில் கிடைப்பது இல்லை, கடினமான பாதையும், வேதனையான சில வலிகளும் தான் நமக்கு வெற்றியை தேடித் தருகிறது.
அந்த வகையில் வாழ்க்கையில் வறுமையையும், சோகமும் நிறைந்து இருந்தாலும் தனது லட்சியப் பாதையில் முன்னேறி இன்று நாடு போற்றும் உச்ச தொலைக்காட்சி நட்சத்திரமாக ரூபாலி கங்குலி(Rupali Ganguly) உயர்ந்துள்ளார்.
இன்று இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் தொலைகாட்சி நடிகையாக உயர்ந்துள்ள ரூபாலி கங்குலி(Rupali Ganguly), ஒரு நேரத்தில் ரூ.50 சம்பளத்திற்காக கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் நடந்து சென்ற காலங்களும் உள்ளது.
ரூபாலி கங்குலியின் தந்தை இந்தியாவின் பிரபலமான திரைப்பட இயங்குநரான அனில் கங்குலி(Anil Ganguly) ஆவார்.
அவர் தர்மேந்திரா நடித்த துஷ்மன் தேவ்தா உள்ளிட்ட சில படங்களில் தோல்வியை சந்தித்த பிறகு தனது பணத்தை முழுவதுமாக இழந்தார்.
தனது சொந்த பணத்தை போட்டு திரைப்படத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ததோடு, அதில் தோல்வியையும் சந்தித்ததால் அவரது குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.
குடும்பம் சில பொருளாதார நெருக்கடியால் அவதியடைந்த போது பிறகு, தியேட்டர் ஒன்றை ஆரம்பித்தார்.
வோர்லி-யில்(Worli) இருந்து பிருத்வி தியேட்டருக்கு(Prithvi Theatre) செல்வதற்கான போக்குவரத்து செலவை குறைப்பதற்காக ரூபாலி கங்குலி கிட்டத்தட்ட 15 கிலோ நடந்து சென்றதாக சமீபத்தில் Mashable India உடனான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் நடந்து சென்று நடித்த முதல் நாடகத்திற்கு 50 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கடினமான வாழ்க்கை பாதையை கடந்து வந்துள்ள ரூபாலி கங்குலி இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கைப்படி, இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் தொலைகாட்சி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.
அனுபமா(Anupamaa) தொடரின் வெற்றிக்கு பிறகு ரூபாலி கங்குலி ஒரு எபிசோடிற்கு 3 லட்சம் வரை ஊதியமாக பெற தொடங்கியுள்ளார்.
அதற்கு முன்னதாக சாராபாய் vs சாராபாய் என்ற தொலைகாட்சி நிகழ்ச்சியில் மோனிஷா சாராபாயாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார்.
அவரது இன்றைய சொத்துமதிப்பு பல கோடிகளில் இருப்பது ஆச்சரியமில்லை.