tamilni 107 scaled
உலகம்செய்திகள்

மீண்டும் பிரித்தானிய பிரதமர் மனைவி தொடர்பில் ஒரு சர்ச்சை: இம்முறை சர்ச்சையில் சிக்கியவர் அவரல்ல…

Share

மீண்டும் பிரித்தானிய பிரதமர் மனைவி தொடர்பில் ஒரு சர்ச்சை: இம்முறை சர்ச்சையில் சிக்கியவர் அவரல்ல…

பிரித்தானியாவில், பிரதமர் மனைவி தொடர்பில் மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. அதில் அவர் நேரடியாக பங்குபெறவிலை என்றாலும், அவர் பங்குதாரராக இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை பிரித்தானியாவில் வளர்க்க உதவுவதாக கன்சர்வேட்டிவ் கட்சி அமைச்சர் ஒருவர் வாக்களித்ததாக புகார் எழுந்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி. அக்‌ஷதா, இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான இந்திய தொழிலதிபர் என். ஆர். நாராயணமூர்த்தியின் மகள் ஆவார்.

அக்‌ஷதாவுக்கு, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 624 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பங்குகள் உள்ளன. தனது பங்குகள் மூலம் கடந்த ஆண்டில் அக்‌ஷதா 13 மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து, ரிஷி, பிரித்தானியாவில் இதுவரை பிரதமர்களாக இருந்தவர்களில் அதிக பணக்கார பிரதமராகியுள்ளார்.

ஏற்கனவே, பணம் தொடர்பான பல சர்ச்சைகளில் அக்‌ஷதாவின் பெயர் அடிபட்ட நிலையில், தற்போது, அவர் சார்ந்த இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடர்பில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

பிரித்தானிய வர்த்தக அமைச்சரான டொமினிக் ஜான்சன் (Lord Dominic Johnson) என்பவர், பிரித்தானியாவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாக அந்த நிறுவனத்தாரிடம் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் இன்ஃபோசிஸ் நிறுவனம் வளர்ச்சியடைவதைத் காண தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள ஜான்சன், அதற்கு உதவுவதற்காக, தன்னால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்வதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவலைப் பெற்று ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு உருவாகியுள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் பிரச்சினை எழுப்பிய லேபர் கட்சியினர், இது மிகவும் தவறு என்றும், தனிப்பட்ட முறையில் பிரதமருக்கு நெருக்கமான ஒரு நிறுவனத்துக்கு பிரித்தானியாவில் விஐபி அந்தஸ்து கொடுக்கப்பட்டது தொடர்பான சீரியஸான கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கவேண்டியிருக்கும் என்றும், லிபரல் டெமாக்ரட் கட்சியினர், இந்த விடயம் குறித்து முழு வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

 

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...