விஜய் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார், ஆனால் அஜித் கலக்குவார்- பிரபல இயக்குனரின் பதில்
விஜய்-அஜித் என்று இவர்கள் பெயர் வரிசையில் போடுவதிலேயே யார் பெயர் முதலில் போட வேண்டும் என்ற பஞ்சாயத்து தொடங்கிவிடும்.
அந்த அளவிற்கு இவர்களுடைய ரசிகர்கள் வெறித்தனமாக இருப்பார்கள். தற்போது கூட வாரிசு-துணிவு பஞ்சாயத்து நீட்டித்து தான் வருகிறது, யார் ஜெயித்தார்கள் என்று.
ரசிகர்கள் சண்டை ஒருபக்கம் இருந்தாலும் இவர்கள் தங்களது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
துணிவு முடித்த அஜித் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருக்க விஜய் லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.
சரி இது ஒரு புறம் இருக்க, தற்போது இணையத்தில் செம பேசுபொருளாக இருக்கும் அமீர் ஒரு கருத்தை வெளியிட அது ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துவிட்டது.
அவர் இயக்கிய ஆதிபகவான் படம் தோல்வியடைந்தது, ஆனால், அந்த படத்தில் அஜித் நடித்திருந்தால் இன்னும் மாஸ்+க்ளாஸாக இருந்திருக்கும்.
ஏனெனில் அஜித்தால் இரண்டு விதமான நடிப்பையும் கொடுக்க முடியும், ஆனால், விஜய்யால் மாஸ் நடிப்பை மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.