Bigboss season 5 - வெளியாகிறது புரொமோ!
சினிமாசெய்திகள்

பிரதீப்பிற்கு எதிராக திரும்பும் முழு பிக்பாஸ், ஸ்மால்பாஸ் வீடுகள்!

Share

பிரதீப்பிற்கு எதிராக திரும்பும் முழு பிக்பாஸ், ஸ்மால்பாஸ் வீடுகள்!

பிக்பாஸ் சீசன் 7 இன்றைய ப்ரோமோவில் பிரதீப் கூல் சுரேஷுக்கும் இடையே வலுத்த சண்டையில் பிரதீப்பிற்கு எதிராக திரும்பிய பிக்பாஸ் வீடு.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்7 ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். விதிப்படி பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். அந்த நூறு நாட்களில் நடத்தப்படும் விளையாட்டுகளிலும், விதிமுறைகள் எப்படி பின்பற்றுகிறார்கள் என்பதன் அடிப்படையிலும் மக்களின் ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையிலும் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பிக்பாஸ் கடந்த ஆறு சீசன்களுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இந்நிகழ்ச்சி உருவாக்கிக்கொண்டது. இதையடுத்து பிக்பாஸ் 7 எப்போது வரும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. அதைவிட யார் போட்டியாளர்களாக இருப்பார்கள் என பெரும் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.

இதையடுத்து அக்டோபர் 1ம் தேதி பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியது. இந்த சீசனில் புது விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதாவது பிக்பாஸ் வீடு ஸ்மால் பாஸ் வீடு என இரு வீடுகளாக பிரித்தனர். பிக்பாஸ் வீட்டில் சரியாக விளையாடாத அறு போட்டியாளர்களை கேப்டனால் தேர்ந்தெடுத்து ஸ்மால்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வீட்டின் அனைத்து வேலைகளையுமே செய்ய வேண்டும். மேலும் எந்த போட்டிகளிலுமே விளையாட கூடாது. பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்பது விதிமுறை.

பிக்பாஸ் சீசன் 7ன் 30 வது நாளான இன்றைய ப்ரோமோ வெளியானது. இந்த ப்ரோமோவில் தலைக்கு மேல் ஒரு மணி வைக்கப்பட்டு அதை ஒலி எழுப்பாமல் யார் வைத்துக்கொள்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என ஒரு போட்டி அறிவிக்கப்படுகிறது.

அந்த போட்டியின் முடிவில் யார் மணி ஒலி எழுப்பினார்கள் என்று போட்டியாளர்களிடமே கேட்கப்படுகிறது. ரவீனா, பிரதீப் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். பிரதீப் பெயரை சொன்ன கூல் சுரேஷை சட்டென்று கெட்டவார்த்தையால் திட்டிவிடுகிறார் பிரதீப்.

இதனால் கடுப்பான கூல் சுரேஷ் வீட்டை விட்டு உடனே வெளியேறுவதாக கூறி லக்கேஜ் எடுத்துக்கொண்டு வருகிறார். பிக்பாஸ் வீட்டாளர்களுக்கும் பிரதீப் சொன்னது பிடிக்காமல் கேள்விக் கேட்கிறார்கள். அதற்கு பிரதீப் ”அப்படித்தான் சொல்வேன்” என்று விடாமல் மீண்டும் மீண்டும் வாக்குவாதம் செய்கிறார்.

ஒரு மன்னிப்பாவது கேட்கலாம் என்று கூறிய சகப் போட்டியாளரிடமும் பிரதீப் ”உன் வேலைய பாரு” என்று கூறி அனைவரிடமும் எரிந்து விழுகிறார். இதனால் முழு பிக்பாஸ் வீடும் பிரதீப்பிற்கு எதிராக நிற்கிறது.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

l90820260105150245
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் டிக்கெட் விலை கோவில்பட்டியில் கிளம்பிய சர்ச்சை; அதிகாரிகளிடம் புகார்!

நடிகர் விஜய் அரசியலில் நுழைந்த பிறகு வெளியாகும் அவரது கடைசித் திரைப்படம் என்பதால் ‘ஜனநாயகன்’ படத்திற்குப்...