சினிமா
இணையத்தில் வைரலாகும் த்ரிஷா, அஜித் புகைப்படங்கள்!
இணையத்தில் வைரலாகும் த்ரிஷா, அஜித் புகைப்படங்கள்!
விடாமுயற்சி இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்ரவிச்சந்தர்இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் பிற்போடப்பட்ட நிலையில் அக்டோபர் நான்காம் திகதி அஜர்பைனில் தொடங்க இருப்பதாகவும், 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்பவுள்ளார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்றைதினம் துபாய் விமான நிலையத்தில் அஜித் மற்றும் திரிஷா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவருடன் ரசிகர் ஒருவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் , சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.