சினிமா
லியோ படத்தின் வசூல் கண்டிபபாக அடிவாங்கும்


லியோ படத்தின் வசூல் கண்டிபபாக அடிவாங்கும்
அடுத்த மாதம் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் லியோ திரைப்படம் திரைக்கு வருகிறது.
பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் எதிர்பார்ப்பை இமாலய உச்சத்தில் வைத்துள்ளது. இதுவரை ரூ. 434 கோடி வரை பிஸ்னஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் உலகளவில் லியோ படம் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்யும் என்கின்றனர். இந்நிலையில், லியோ படத்தின் முதல் நாள் தமிழக வசூல் கண்டிப்பாக அடிவாங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அரசு விதிமுறையின்படி லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் என ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால், தயாரிப்பாளர் அதிகாலை காட்சிக்கு அரசிடம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.
ஒருவேளை அதிகாலை காட்சி கிடைக்கவில்லை என்றால் லியோ படத்தின் தமிழக வசூலில் முதல் நாள் கிட்டத்தட்ட 40% சதவீதம் அடிவாங்கும் என பிரபல திரையரங்க உரிமையாளர் கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.