9 வருடங்கள் ஆகியுள்ள அஞ்சான் திரைப்படத்தின் மொத்த வசூல்
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அஞ்சான். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.
மேலும், Vidyut Jammwal, Manoj Bajpayee, சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் உடன் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.
ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. ஆம், இன்று வரை சூர்யா ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தை கொடுத்த படங்களில் ஒன்று அஞ்சான்.
இந்நிலையில், அஞ்சான் திரைப்படம் வெளிவந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 89 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.