ஜவான் படத்தில் வயதான ரோலில் விஜய் சேதுபதி..
ஜவான் படத்தில் வயதான ரோலில் விஜய் சேதுபதி..
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து மாஸ் காட்டியது. அதை தொடர்ந்து அனிருத் இசையில் உருவான ஜவான் படத்தின் முதல் பாடல் வெளிவந்து Youtubeல் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில், புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில், விஜய் சேதுபதி வயதான லுக்கில் இருக்கிறார்.
டிரைலரில் இளமையான தோற்றத்தில் இருந்த விஜய் சேதுபதி போஸ்டரில் வயதான லுக்கில் இருப்பதால், இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா அல்லது ஒரே கதாபாத்திதில் இளமாகவும், வயதானவராகவும் நடிக்கிறாரா என ரசிகர்கள் மாற்றி மாற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.